இன்ஸ்டாகிராம் காதலனுடன் நர்சிங் மாணவி ஓட்டம்
|மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மாராகுடியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 30-ந் தேதி மதியம் கல்லூரி இடைவேளையில் வெளியே சென்றார். ஆனால் மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை. இரவு நீண்ட நேரம் ஆகியும் விடுதிக்கும் அவர் வரவில்லை. இதையடுத்து சக மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரகுபதி விசாரணை நடத்தினார்.
அப்போது அவருக்கு சேலத்தில் இன்ஸ்டாகிராம் நண்பர் இருப்பதும், இருவருக்கும் காதல் ஏற்பட்டு அடிக்கடி அவருடன் பேசுவதும், அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரகுபதி வேலூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.