< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம்
|19 May 2022 10:59 PM IST
நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
நெல்லிக்குப்பம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் பண்ருட்டியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படிக்கும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவியை பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.