4-வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை.. காதல் தோல்வியா..?
|4-வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
கோவை,
கன்னியாகுமரி மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பபிஷா(வயது 18). கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், அதன் விடுதியில் தங்கியிருந்து, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் பபிஷா நேற்று முன்தினம் காலையில் விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனே கல்லூரி நிர்வாகத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி பபிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் பபிஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.