< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் - விடுதி மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
|2 Aug 2022 8:20 AM IST
திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
திருவேற்காடு,
திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஈரோட்டை சேர்ந்த சுமதி (வயது 19) என்ற மாணவி விடுதியில் உள்ள தனது அறையில் மாணவி சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்ற உள்ளனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவி சுமதியின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் எதிரொலியாக, கல்லூரிக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது.