< Back
மாநில செய்திகள்
நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கரூர்
மாநில செய்திகள்

நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2023 11:41 PM IST

கரூரில் தாய் கண்டித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நர்சிங் கல்லூரி மாணவி

நாகை மாவட்டம், வேட்டைக்காரன் புதூர் அருகே உள்ள முதலியப்பன் கண்டி கரபிடகையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் கோபிகா (வயது 19). இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியில் உள்ள தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு சுகாதார உதவியாளருக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிகா கரூரில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு பயிற்சியும் பெற்று வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிகா தனது அத்தை மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது தாய் கோபிகாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோபிகா சம்பவத்தன்று தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்