< Back
மாநில செய்திகள்
மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்
மாநில செய்திகள்

மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்

தினத்தந்தி
|
20 Jan 2023 7:44 PM IST

கல்வராயன் மலையில் செவிலியர்கள் அளித்த பிரசவ சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கல்வராயன் மலையில் செவிலியர்கள் அளித்த பிரசவ சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பாக்யராஜ் மற்றும் மல்லிகா. மல்லிகா நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து கல்வராயன் மலையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். அங்கு, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் சோரப்பட்டு அரசு மருத்துவமனையில் மல்லிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சையில் தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செவிலியர்கள் சிகிச்சை அளித்ததனால் தான் இரு உயிர்களும் பறிபோனது என்றும், மருத்துவமனையில் பெரும்பாலன நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்