< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Dec 2022 5:16 PM GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவி கலா முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவி சித்ரா வரவேற்றார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எம்.ஆர்.பி. மூலம் தேர்வான செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.

இதேபோல் எம்.ஆர்.பி. போட்டி தேர்வு மூலம் தேர்வாகி, 7 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் அவசர நிலை கருதி கொரோனா சிகிச்சை அளித்த செவிலியர்களை கொண்டு 2 ஆயிரத்து 500 காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருள்மேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்