அரியலூர்
முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பிய நர்சுகள்
|முதல்-அமைச்சருக்கு நர்சுகள் தபால் அனுப்பினர்.
தாமரைக்குளம்:
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக நர்சுகளுக்கு பணி பாதுகாப்பு மற்றும் தொகுப்பூதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நர்சுகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நர்சுகள் தங்களது கோரிக்கையை தபால் அட்டையில் மனுவாக எழுதி, அரியலூர் தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் போட்டனர்.
இதில் கைக்குழந்தையுடன் வந்தவர்கள், கர்ப்பமாக உள்ளவர்கள் உள்பட திரளான நர்சுகள் பங்கேற்றனர். பின்னர் நர்சுகள் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் இறைவனின் தேவதைகள் என நர்சுகளை போற்றினர். அப்போது பல உயிர்களை காப்பாற்றினோம். ஆனால் தற்போது பல்வேறு கட்ட இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆனால் தற்போது எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தமிழக அரசு, எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.