< Back
மாநில செய்திகள்
நடத்தையில் சந்தேகம்... தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் குத்திக்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

நடத்தையில் சந்தேகம்... தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் குத்திக்கொலை

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

நடத்தையில் சந்தேகப்பட்டு தனியார் மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-

நர்ஸ்

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நான்சி (வயது32). தனி யார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் வினோத் (37). மருத்துவ பிரதிநிதி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து வினோத் ரத்தினபுரியி லும், நான்சி ஆறுமுக கவுண்டனூர் வீதியிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் நான்சியின் நடத்தையில் வினோத்துக்கு சந்தேகம் ஏற்பட் டது. இதனால் அவர், நான்சி பணிக்கு செல்லும் போது எல்லாம் பின்தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார்.

மோதல் முற்றியது

நேற்று பகல் 2 மணியளவில் நான்சி தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வினோத் திடீரென்று நான்சியிடம் தகராறில் ஈடுபட்டார்.

உடனே நான்சி, வேலை பார்க்கும் இடத்துக்கு வந்து எதற்காக தகராறு செய்கிறீர்கள் என்று கண்டித்து உள்ளார். இதனால் அவர்கள் இடையே மோதல் முற்றியது.

சரமாரியாக குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த வினோத், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீரென்று நான்சியை கத்தியால் குத்த முயன்றார். அதை நான்சி தடுக்க முயன்று போராடினார். அப்போது வினோத் தின் கைகளிலும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் ஆத்திரம் அடங்காமல் நான்சியின் கழுத்து, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதை பார்த்து அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கத்திக்குத்துப் பட்ட நான்சி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நான்சி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதைத்தொடர்ந்து கத்தியுடன் நின்ற வினோத்தை மருத்துவமனை வளாகத்தில் நின்ற பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து வினோத்தை பிடித்துச்சென்றனர். கையில் காயம் இருப்பதால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வினோத் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் கத்தியால் கத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்