< Back
மாநில செய்திகள்
2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை
மாநில செய்திகள்

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை

தினத்தந்தி
|
11 April 2023 2:13 AM IST

குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு நர்சு அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வட்ராபுத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சின்னராசு (38). இவர் அருகிலுள்ள கானலாபாடியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சூர்யா (வயது 32), சோமாசிபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லக்ஷன் (4), உதயன் (1) ஆகிய 2 மகன்கள். சின்னராசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மகன்களுடன் தற்கொலை

நேற்று முன்தினம் இரவு சின்னராசு வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனம் உடைந்த நிலையில் இருந்த சூர்யா தனது 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள விவசாய கிணற்றிற்கு மகன்கள் இருவரையும் அழைத்து சென்ற சூர்யா, தனது மனதை கல்லாக்கிக் கொண்டு 2 மகன்களையும் கிணற்றில் வீசினார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் பலியாகின. தொடர்ந்து சூர்யா தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்