< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
எண்ணும் எழுத்தும் புத்தகம்
|24 March 2023 12:31 AM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் காணை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கற்றல் குறைபாடு உடைய அரசு பள்ளி மாணவர்களை பரிசோதனை செய்து கற்றல் திறன் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கற்றல் திறனுக்கேற்ப அரும்பு, மொட்டு என்ற தலைப்பில் புத்தகங்களை காணை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஈவாப்ரீத்தா, இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன், சிறப்பு பயிற்றுனர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, ஏசுமரி ஆகியோர் கலந்து கொண்டனர்.