< Back
மாநில செய்திகள்
புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை:  பொதுமக்களுக்கு உதவ செல்போன் எண்கள் வெளியீடு
நாமக்கல்
மாநில செய்திகள்

புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு உதவ செல்போன் எண்கள் வெளியீடு

தினத்தந்தி
|
9 Dec 2022 6:43 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள அரசு அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகியுள்ள மாண்டஸ் புயலையடுத்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.

மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர கால உதவிக்கு நாமக்கல் மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்- 1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை- 101, மருத்துவ உதவி- 104, ஆம்புலன்ஸ் உதவி- 108 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

செல்போன் எண்கள் வெளியீடு

மேலும் கள நிலையிலான உதவிகளுக்கு தாசில்தார்களை நாமக்கல்- 94450 00543, ராசிபுரம்- 94450 00544, கொல்லிமலை- 80721 22057, மோகனூர்- 99524 12755, சேந்தமங்கலம்- 99420 29345, திருச்செங்கோடு- 94450 00545, குமாரபாளையம்- 97869 84577, பரமத்திவேலூர்- 94450 00546 என்கிற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல் கண்காணிப்பு அலுவலர்களை ராசிபுரம்- 94450 00232, குமாரபாளையம்- 73388 01265, கொல்லிமலை- 86101 63146, நாமக்கல்- 94450 00431, திருச்செங்கோடு- 94450 00432, சேந்தமங்கலம்- 94450 00232, மோகனூர்- 94450 29718, பரமத்திவேலூர்- 94454 77850 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்