< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
நூதன ஆர்ப்பாட்டம்
|28 Jan 2023 12:15 AM IST
கடம்பூர் காட்டுப்பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கயத்தாறு:
கடம்பூர் காட்டுப்பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணை தலைவரும், வழக்கறிஞருமான அய்யலுச்சாமி என்பவர் நேற்று காலை நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார். கயத்தாறு தாலுகா பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்க வேண்டும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறுதுணையாக செயல்படும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் குற்றங்கள் சுமத்துவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் புளிய மரத்தில் ஒரு மணி நேரம் தலைகீழாக நின்று கோஷங்களை எழுப்பினார்.