< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
காதலர் தினத்தை எதிர்த்து நூதன பிரசாரம்
|12 Feb 2023 12:30 AM IST
திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் காதலர் தினத்தை எதிர்த்து சமூகஆர்வலர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சமூக ஆர்வலர். இவர், திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டிக்கு நேற்று வந்தார். அங்கு பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் எழுதிய அட்டைகளை வைத்திருந்தார். மேலும் பஸ்நிறுத்தத்தில் இருந்து சந்தை வரை சென்று பொதுமக்களிடம் காதலர் தினம் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் நம் பண்பாடு, கலாசாரங்களை பாதுகாப்பது, மரம் வளர்ப்பது, ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி வலியுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.