< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

தினத்தந்தி
|
12 July 2023 7:01 PM GMT

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

இலவச பயிற்சி வகுப்புகள்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 2023-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் 2-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட உள்ளது. இப்போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 17-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்பட உள்ளது. தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள், அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.

போட்டிதேர்வுகளுக்கு தயாராகும்...

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவும். மேலும் விவரங்களுக்கு studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்