< Back
மாநில செய்திகள்
கோவை நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகளால் பொங்கி எழும் நுரை - பொதுமக்கள் புகார்
மாநில செய்திகள்

கோவை நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகளால் பொங்கி எழும் நுரை - பொதுமக்கள் புகார்

தினத்தந்தி
|
9 Oct 2022 12:31 AM IST

ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை,

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் இந்த நுரை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கும் பொதுமக்களுக்கு அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்