< Back
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
சேலம்
மாநில செய்திகள்

குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

தினத்தந்தி
|
18 Aug 2022 1:35 AM IST

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சூரி என்கிற சூரியமூர்த்தி (வயது 67). பிரபல ரவுடியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரை என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கருவாட்டு பாலம் அருகே உதுமன் அலி என்பவரை வழிமறித்து 900 ரூபாயை பறித்து சென்றார். மேலும் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து 2 பவுன் நகை, மோதிரம், செல்போன், ரூ.2,600 ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாகவும் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படி சூரி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாலும், அவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் சூரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்