< Back
மாநில செய்திகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு -  மே 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு - மே 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தினத்தந்தி
|
9 May 2023 6:25 PM IST

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள்,துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்