< Back
மாநில செய்திகள்
மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

தினத்தந்தி
|
16 Jan 2024 6:25 AM IST

சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்