< Back
மாநில செய்திகள்
அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
மாநில செய்திகள்

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Oct 2023 10:48 AM IST

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை,

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்,

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1.500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்