< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு - அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

தமிழக அரசு விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு - அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
6 Sept 2022 3:30 PM IST

விளையாட்டுத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

சென்னை,

விளையாட்டுத்துறை சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்-அமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின்படி விளையாட்டுத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதன்படி கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுக்கள், உடற்கல்வி ஆசிரியரிகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விருதுகளுக்கான அரசாணை தமிழக அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்