< Back
மாநில செய்திகள்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு
மாநில செய்திகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Dec 2023 7:37 PM IST

கனமழை காரணமாக கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

வேலூர்,

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 80 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

இதனிடையே கனமழை காரணமாக கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகளுக்கான மறு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்