< Back
மாநில செய்திகள்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
5 May 2024 4:40 PM IST

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது.

சென்னை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வருகிற 20-ந்தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்