< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
|15 July 2022 11:49 PM IST
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2020 -21-ன் கீழ் 5,994 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு திட்ட செயல்பாடுகள் குறித்து கையேடு கலெக்டர் தலைமையில் வழங்கப்பட்டது. மேலும், இத்திட்டம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாநில அளவில் புகார் எண்களான 8925422215, 8925422216 என்ற செல்போன் எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் இதர சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.