< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அறிவிப்பு வரும் 28 -ம் தேதி வெளியாகும்..!
|18 Oct 2023 11:23 AM IST
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வரும் 28 -ம் தேதி வெளியாகும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். எனவே அவர்கள் எந்தவித சிரமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும், அதன் படி இந்த ஆண்டுக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வரும் 28 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் ஆகிய இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.