< Back
மாநில செய்திகள்
துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ்

தினத்தந்தி
|
7 Feb 2023 10:23 PM IST

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்தது குறித்து விளக்கம் கேட்டு துணைபோலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

4 பெண்கள் பலி

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சைக்கு டோக்கன் பெறுவதற்கக கூடியிருந்த கூட்ட நெரிசலில் சிக்க 4 பெண்கள் பலியானார்கள். இந்த விபத்துக்கு காரணமான மாவட்ட நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்க சம்பந்தப்பட்ட விழா ஏற்பாட்டாளர் இரண்டு நாட்களுக்கு உரிய போலீஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் பாதுகாப்பு அளிக்கவில்லை. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்காது எனவும், இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்