< Back
மாநில செய்திகள்
மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாநில செய்திகள்

மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Jun 2023 8:54 AM IST

மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி மாதத்தில் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், இடமாற்றம் கிடைக்கப்பெறாதோரும் ஜூலை 1 முதல்இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பொறுப்பு அதிகாரியிடமும் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம்விண்ணப்பங்கள் பெறப்படுவதால், கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பம் செய்தவர்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஜூலை 15-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் பொறுப்பு அதிகாரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறுஅந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்