< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ்
|22 Oct 2023 12:16 AM IST
வரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் குத்தகை இடங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளோர்களின் வீடுகளில் அசையா சொத்துகளை கைப்பற்றி பொது ஏலம் விடும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் வீட்டில் குத்தகை உரிமம் நிலுவை ரூ.39 லட்சத்து 61 ஆயிரத்திற்காக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சியில் நிலுவையில் இருந்த வரி மற்றும் வரியில்லா இடங்களில் கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.