< Back
மாநில செய்திகள்
கொளப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கொளப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ்

தினத்தந்தி
|
6 Jun 2023 2:35 PM IST

கொளப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மாற்று இடம் தரக்கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர் வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து 47 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக நீர் வள ஆதாரத்துறை உதவி என்ஜினீயர் சார்பில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாங்கள் இருக்கும் பகுதி நீர் வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை எனவும் தங்கள் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என்றும் வீடுகளை அகற்றாமல் இருக்க வேண்டும் அப்படி அகற்றினாலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் வீடுகளை அகற்றினால் மாற்று இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொளப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் ஏசுபாதம் தலைமையில் பாதிக்கப்பட்ட 47 குடும்பத்தை சேர்ந்தவர்களும் குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனுவை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். நீர் வள ஆதாரதுறைக்கு சொந்தமான பகுதியில் 47 வீடுகள் அகற்றுவதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்