< Back
மாநில செய்திகள்
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை
திருவாரூர்
மாநில செய்திகள்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை

தினத்தந்தி
|
24 Oct 2022 12:15 AM IST

திருமக்கோட்டை போலீசார் சார்பில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் கடைவீதி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலகையில்,தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.100-க்கு பதில் ரூ.1,000 வசூலிக்கப்படும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் 2-வது முறை சிக்கினால் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லை என்றால் ரூ.500-க்கு பதில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும், ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் ரூ.500-க்கு பதில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும். கார், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். கனரக வாகனங்கள் வேகமாக ஓட்டினால் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனங்களில் அதிக வேகத்தில் சென்றால் ரூ.1000 ஆயிரம் வசூலிக்கப்படும் எனவும், சாலை விதிகளை கடைபிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி அதில் எழுதப்பட்டு இருந்தது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்