< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: எஸ்.பி வேலுமணி
|13 Sept 2022 4:39 PM IST
லஞ்ச ஒழிப்பு சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை,
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி வேலுமணி கூறியதாவது: காவல்துறையை அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் நடக்கிறது. சோதனையில் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. எடப்பாடிபழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன" என்றார்.