< Back
மாநில செய்திகள்
சினிமாவில் அல்ல.. அரசியலில்.. மீண்டும் டைரக்டர் ஆன சீமான்
மாநில செய்திகள்

சினிமாவில் அல்ல.. அரசியலில்.. மீண்டும் டைரக்டர் ஆன சீமான்

தினத்தந்தி
|
23 March 2024 6:26 PM IST

அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களை வைத்து விளம்பரங்களை படமாக்கும் நிலையில், சீமான் இயக்குனர் என்பதால் அவரே களத்தில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது கட்சியினர்

சென்னை,

புரட்சிகரமான பல்வேறு தமிழ் திரை படங்களை இயக்கியவர் சீமான் இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு திரைப்படம் இயக்குவதை நிறுத்தினார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் தனித்து களம் காணும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஏற்கனவே இருந்த சின்னம் பறிக்கப்பட்ட நிலையில் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது வேட்பாளர்களையும் அவர்கள் வாக்குறுதிகளையும் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் 40 தொகுதி வேட்பாளர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்தி சீமான் இயக்குனராக மாறியுள்ளார் இதில் மருத்துவம், வக்கீல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில் மருத்துவராக போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளை நிற கோட் மற்றும் கழுத்தில் ஸ்டெதஸ் கோப் வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறுவதும் ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனித்தனியாக பேசவைத்தும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களை வைத்து விளம்பரங்களை படமாக்கும் நிலையில், சீமான் இயக்குனர் என்பதால் அவரே களத்தில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது கட்சியினர்

மேலும் செய்திகள்