< Back
மாநில செய்திகள்
டெல்லியில் அ.தி.மு.க.வினர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தெரியாது - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி
மாநில செய்திகள்

'டெல்லியில் அ.தி.மு.க.வினர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தெரியாது' - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி

தினத்தந்தி
|
23 Sept 2023 10:39 PM IST

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. தேசிய தலைவரை சந்தித்தது பற்றி தனக்கு தெரியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடன் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் முற்றிலும் தவறானது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. தேசிய தலைவரை சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது. ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலமாகவே அவர்கள் டெல்லி வந்திருப்பது பற்றி எனக்கு தெரிய வந்தது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது நான் உடன் இருந்ததாக கூறப்படுவது தவறான கருத்து."

இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.



மேலும் செய்திகள்