< Back
மாநில செய்திகள்
தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் - வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் - வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
3 Feb 2023 10:19 PM IST

திருப்பூரில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

திருப்பூரில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு பணிபுரிய வந்துள்ள மட மாநிலத்தவர்கள் தான் அதிக அளவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் தமிழகத்தில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களுக்கு வரைமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்