திருவள்ளூர்
கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது
|கூடுவாஞ்சேரி அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒரு வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். மேலும் அவர் கையில் வைத்திருந்த பையை பரிசோதித்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த யாஸ் சாஸ்வத் ஜா (வயது 20), இவர் தைலாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.