< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டு சென்ற வடமாநில தொழிலாளர்கள்
|6 March 2023 12:49 AM IST
ஹோலி பண்டிகையை கொண்டாட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.
வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர். மேலும் தமிழகத்தில் வடமாநிலத்தவர் தொடர்பான விவகாரத்தில் சிலரும் சொந்த ஊர் புறப்படுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஆங்காங்கே பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊரில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று அவர்களது சொந்த ஊர் புறப்பட்டனர். ராமேசுவரம்- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் புவனேஸ்வர் புறப்பட்டு சென்றனர். மேலும் தங்களது உடைமைகளை எடுத்து சென்றனர். பண்டிகை முடிந்ததும் ஓரிரு நாட்களுக்கு பிறகு திரும்பி வருவதாக அவர்கள் கூறினர்.