< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி
|4 March 2023 1:59 PM IST
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
சென்னை,
பாஜக மூத்த தலைசர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பித்தலாட்டம்.. ஏனென்றால், 19 ஆர்.எஸ்.எஸ். முன்னனியினரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு படுகொலை நடக்கிறது. போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது.
நம் வேலைகளை தமிழர்கள் பார்ப்பதற்கு தயாராக இல்லாத சூழலில் இருக்கையில், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும்.
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை. இங்கே உள்ளவர்கள் தான் ரெயிலில் புக் பன்னி கூட்டி வந்தார்கள். ஆனால் சிலரோ, எங்களுக்கு ஓட்டு சேர்ப்பதற்காக இங்கே திரட்டி வருவதாக கூறுகின்றனர்.. இவ்வாறு அவர் பேசினார்.