< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்
நாமக்கல்
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

எருமப்பட்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடினார்.

எருமப்பட்டி

எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோழிப்பண்ணை மற்றும் கிழங்கு மில், நூற்பாலைஆகிய இடங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்து எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி பொன்னேரி கைக்காட்டில் உள்ள தனியார் நூற்பாலையில் வடமாநில தொழிலாளர்களிடம் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் அங்கு சென்று அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், வேறு ஏதாவது பிரச்சினை இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்