< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
16 July 2023 5:19 PM IST

திருவள்ளூரில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராகுல் திருவள்ளூர் காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது, நீண்ட நேரம் தனது உறவினருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திடீரென ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்