< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2022 9:43 PM IST

திருமணம் செய்ய காதலி காலம் தாழ்த்தியதால், வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெகமம்

திருமணம் செய்ய காதலி காலம் தாழ்த்தியதால், வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமாநில தொழிலாளி

ஒடிசா மாநிலம் உத்தேப்பூர் பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் ராணா(வயது 27). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் செயல்பட்டு வரும் தனியார் மெத்தை கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அமர்ஜித் ராணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

தற்கொலை

இதையடுத்து அமர்ஜித் ராணா சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணிடம் சென்று, திருமணம் செய்து கொள்ள அழைத்தார். அதற்கு அந்த இளம்பெண், இன்னும் சில நாட்கள் செல்லட்டும், அதன்பிறகு குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாக அமர்ஜித் ராணா மனமுடைந்து காணப்பட்டார். மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்ததால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமர்ஜித் ராணாவின் அண்ணன் திலீப்குமார் ராணா அளித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து கொள்ள காதலி காலம் தாழ்த்தியதால் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்