< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போலீசுக்கு பயந்தோடிய வட மாநில பயணி.. தடுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் - சென்னை சென்ட்ரலில் பரபரப்பு
|9 April 2023 2:16 PM IST
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே காவலர் அடித்ததில், அச்சத்தில் வெளியே ஓடிவந்த வட மாநில இளைஞர் தடுக்கி விழுந்தததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே காவலர் அடித்ததில், அச்சத்தில் வெளியே ஓடிவந்த வட மாநில இளைஞர் தடுக்கி விழுந்தததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சொந்த ஊர் செல்வதற்காக வந்த வட மாநில இளைஞர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மதுபோதையில் இருந்ததன் காரணமாக, இளைஞரை அடித்துள்ளனர். அப்போது, தப்பிச் செல்ல ஓட முயன்ற இளைஞர், கால் தடுக்கி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ரெயில்வே காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.