பெரம்பலூர்
வடமாநில இரும்பு கடை உரிமையாளர் கடத்தலா?
|வடமாநில இரும்பு கடை உரிமையாளர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மல்லிகை நகரில் வசித்து வரும் ஜெகராமின் மகன் பரத்குமார் என்ற பகடுராம் (வயது 35). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வடக்கு மாதவி ரோட்டில் சொந்தமாக இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு கடையில் இருந்த பகடுராம் ஊழியர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் அவர் மீண்டும் கடைக்கும், வீட்டிற்கும் திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பகடுராமை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகப்படும் படியாக அவரது வங்கி கணக்கில் இருந்து இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பகடுராமை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.