< Back
மாநில செய்திகள்
அனகாபுத்தூரில் வடமாநில வாலிபர் கொலை
சென்னை
மாநில செய்திகள்

அனகாபுத்தூரில் வடமாநில வாலிபர் கொலை

தினத்தந்தி
|
14 Dec 2022 9:53 AM IST

அனகாபுத்தூரில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், இந்திரா நகர், கே.கே.ஷா. தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷானுக்கான் (வயது 36), சவுரப்கான் (36) ஆகிய இருவர் தங்கி, வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் வேலை செய்துவந்தனர். இந்தநிலையில் மொட்டை மாடியில் உள்ள வீட்டில் ஷானுக்கான், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் தங்கி இருந்த சவுரப்கான் மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளரான பன்னீர்செல்வம், இதுபற்றி சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஷானுக்கான் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் விசாரணையில் ஷானுக்கானை கொலை செய்துவிட்டு அவரது நண்பரான சவுரப்கான் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது.

மேலும் விசாரணையில் சவுரப்கான், ரெயில் மூலம் உத்தரபிரதேச மாநிலத்துக்கு தப்பி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த பிறகே ஷானுக்கானின் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்