< Back
மாநில செய்திகள்
கொல்லங்கோடு அருகே மது விற்ற வடமாநில வாலிபர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கொல்லங்கோடு அருகே மது விற்ற வடமாநில வாலிபர் கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 12:29 AM IST

கொல்லங்கோடு அருகே மது விற்ற வடமாநில வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீசார் நேற்று காலையில் ஊரம்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 12 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாப்பு மண்டல் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

--

மேலும் செய்திகள்