வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை... கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட்
|தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பணிபுரிந்துவரும் வட மாநில தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். மேலும், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்.. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.