< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சி
சேலம்
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
26 Oct 2023 1:04 AM IST

வடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் காலந்திநாயக் (வயது 49). இவர், சேலம் டவுன் போலீஸ் நிலையம் அருகில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், சக தொழிலாளர்களுடன் ஓட்டலின் மேல்மாடியில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கேபிள் வயரில் காலந்திநாயக் கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்