< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி 'திடீர்' சாவு
|13 Jun 2023 7:12 PM IST
நூற்பாலையில் தங்கி பணிபுரிந்த வடமாநில தொழிலாளி திடீரென இறந்தார்.
மத்தியபிரதேச மாநிலம் சங்கரலி பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசங்கர் சகீஸி (வயது 31). இவர், வேடசந்தூர் அருகே கோட்டைமேடு பகுதியில் உள்ள நூற்பாலை விடுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கியிருந்தபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்பாலை நிர்வாகத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமசங்கர் சகீஸி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசங்கர்சகீஸியின் உறவினர் மூனாத்திதேவி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.