< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகரில் வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
|11 July 2023 4:33 PM IST
மறைமலைநகரில் வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது பப்லு (வயது 39). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இறைச்சி கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சார பாய்ந்து மயங்கி கீழே விழுந்த முகமது பப்லு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த முகமது பப்லுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.