< Back
மாநில செய்திகள்
திங்களூர் அருகே  தூக்குப்போட்டு வடமாநில பெண் தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

திங்களூர் அருகே தூக்குப்போட்டு வடமாநில பெண் தற்கொலை

தினத்தந்தி
|
29 Sept 2022 1:00 AM IST

தூக்குப்போட்டு தற்கொலை

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ரூல் அமீன் காஜி. இவர் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள சின்னவீரசங்கிலி பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகள் ரூபினா காத்துன். இவரும் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரூல் அமின் காஜி, அவருடைய மனைவி, இளைய மகள் ஆகியோர் விஜயமங்கலம் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றுவிட்டனர். வீட்டில் ரூபினா காத்துன் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சந்தைக்கு சென்ற 3 பேரும் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார்கள். அப்போது கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே ரூபினா காத்துன் மின்விசிறி மாட்டும் இரும்பு கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ரூபினா காத்துன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில், ரூபினா காத்துனுக்கு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும், இந்த நிலையில் அவருடன் செல்போன் பேசியதை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்