< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கார் மோதி வடமாநில வாலிபர் பலி
|21 July 2022 12:16 AM IST
கார் மோதி வடமாநில வாலிபர் பலியானார்.
அரவக்குறிச்சி அருகே பண்ணப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பீகார் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த தில்கோத் (வயது 28) என்பவர் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பண்ணப்பட்டி குடகனாற்று பகுதியில் தில்கோத் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.